'அந்த நாட்டையே இந்தியா முந்திடுச்சு, இப்படியே போனா'... 'இதுவரை இல்லாத பாதிப்பாக ஒரே நாளில்'... 'வெளியாகியுள்ள ஷாக் தகவல்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 90,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 42,04,613 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 1,016 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 71,642 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதல் 5 இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு ஆகிய நாடுகள் இருந்தன. இந்நிலையில், 2வது இடத்தில் இருந்த பிரேசில் நாட்டை இந்தியா தற்போது முந்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 42,04,613 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பிரேசிலில் தற்போது மொத்த பாதிப்பு 41,37,606 ஆகவும், உயிரிழப்பு 1,26,686 ஆகவும் உள்ளது. கடந்த சில நாட்களாகவே பிரேசிலில் உயிரிழப்பும், புதிய கொரோனா பாதிப்பும் குறைந்து வருகிறது. பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 14,606 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர், 456 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே நேரம் இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த நிலை நீடித்தால் இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையே கொரோனா பாதிப்பில் மிகப்பெரிய இடைவெளி ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 32.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 69 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள போதும், புதிய பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
