'வங்கியில் இருந்து சுடச்சுட வந்த பணம்!'.. 'பழைய டெக்னிக்' கும்பலிடம் 'பலமாக' ஏமார்ந்த முதியவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 29, 2019 06:47 PM

கர்நாடகாவின் பெங்களூரில் முதியவர் ஒருவரின் கவனத்தை 10 ரூபாயை வைத்து திசை திருப்பி லட்ச ரூபயை திருடிச் சென்ற நபர்களது செயல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Man steals 1.30 lakhs by showing 10 rs in Karnataka bank

மிகவும் பழைய டெக்னிக்தான் என்றாலும், இன்றும் 10 ரூபாயை போட்டு உங்கள் கவனத்தை திசை திருப்பி, திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டுவார்கள் என வங்கிகள் தங்களது எச்சரிக்கை பலகையின் முதல் பாய்ண்ட்டாக வைத்திருக்கும் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி முதியவர் ஒருவரிடம் இருந்து ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யஸ்வந்புரா பகுதியை சேர்ந்த குண்டப்பா என்கிற முதியவர் வங்கியில் இருந்து தன்  பணம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, காரில் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். வீட்டை அடைந்தபோது, அவ்வழியே வந்த ஒருவன் பத்து ரூபாய் நோட்டுளை கீழே சிதறவிட்டுவிட்டு, உது உங்கள் பணமா? என கேட்டுள்ளான்.

அதைப் பார்த்த குண்டப்பா, ஒன்றும் விளங்காமல், தன் பணமா என்கிற குழப்பத்தில் குனிந்து அந்த 10 ரூபாய் நோட்டுகளை முதியவர் எடுக்க முயன்றுள்ளார். அதற்குள் காரின் மற்றொரு கதவைத் திறந்த மற்றொரு திருடன், முதியவர் குண்டப்பா எடுத்துவந்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயையும் அபேஸ் செய்துவிட்டு ஓடிவிட்டான். இந்த சம்பவம் பலரையும் அதிரவைத்துள்ளது.

Tags : #KARNATAKA #BANK #ROBBERY