'டாப் கியரில் செல்லும் தங்க விலை'... புதிய உச்சத்தை எட்டுமா?...30 ஆயிரத்தை நெருங்கும் சவரன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 24, 2019 11:37 AM

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், இன்று தங்க விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Gold Price again goes high Rate check today gold price

சில தினங்களாக சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்த வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரன் ரூ.640 உயர்ந்து, புதிய உச்சமாக ரூ.29,440க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் தங்கத்தின் விலை சவரன் 30 ஆயிரம் ரூபாயை தொட்டுவிடும். தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 80ரூபாய் அதிகரித்து, 3,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.49.20க்கு விற்பனையாகிறது. தங்கம் இதுவரை இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 3 வாரங்களில் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

Tags : #GOLD PRICE #HIGH RATE #CHENNAI