‘புது பதவி’!.. ‘அசரவைக்கும் சுந்தர் பிச்சை சம்பளம்’!.. ஒரு வருஷத்துக்கு மட்டும் இத்தன கோடியா..?
முகப்பு > செய்திகள் > வணிகம்By Selvakumar | Dec 22, 2019 10:29 AM
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் சம்பவள விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு கூகுள் டூல்பார், கூகுள் குரோம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றினார். இதனை அடுத்து கடந்த 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் சி.இ.ஓ-வாகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது சம்பள விவரங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், சுந்தர் பிச்சையின் வருடாந்திர சம்பளம் 2 மில்லியன் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்புல் சுமார் 14 கோடி. இந்த ஊதிய உயர்வு வரும் 2020-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 240 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (17,07,07,20,000 ரூபாய்) ஸ்டாக் பேக்கேஜ்ஜாக வழங்கப்பட உள்ளது.
இதுபோக இந்த நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினால் ஆண்டுக்கு இரு பிரிவுகளில் 120 மில்லியன் டாலர் (853 கோடி ரூபாய்) மற்றும் 30 மில்லியன் டாலர் (213 கோடி ரூபாய்) ஸ்டாக் பேக்கேஜ் வழக்கப்பட உள்ளது. ஸ்டாக் பேக்கேஜ் (Stock Package) என்பது குறிப்பிட்ட காலம் அதே நிறுவனத்தில் பணியாற்றினால் அக்காலத்தின் முடிவில் தரப்படும் பங்கு தொகை ஆகும்.
