இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Sep 09, 2019 07:48 PM
இன்றைய முக்கியச் செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. செய்திகள் பின்வருமாறு:-
1. தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என என்.டி.ஏ அறிவித்துள்ளது.
2.ட்விட்டரில் தனக்கு அதிகாரப் பூர்வமான கணக்குகள் இல்லை என்றும், தனது பெயரில் உலா வருபவை போலியானவை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபேல் நடால்.
4. டிகேர் அணியின் ஜெர்சியை பிசிசிஐ அனுமதி பெறாமல் அணிந்தது தன் தவறுதான் என தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கோரினார்.
5. தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் சென்ற தமிழக முதல்வர் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்.
6. ட்விட்டரில் 5 கோடி ஃபாலோயர்ஸ் உள்ளதால், உலகின் 3-வது பெரும் அரசியல் பிரபலமாக மோடி உருவெடுத்துள்ளார்.
7. இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில், 185 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி, வெற்றி பெற்றதோடு, தொடரை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.
8. விக்ரம் லேண்டர் உடையவில்லை என்றும், சாய்ந்த நிலையில் உள்ளதாகவும் இஸ்ரோவில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
9. சமீபத்தில், காபூலில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு அமெரிக்க வீரர் உள்பட 12 பேர் பலியாகினர். இதனையடுத்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார். இதன் எதிரொலியாக தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் தரப்பிலிருந்து, "அதிகமான உயிர்பலி ஏற்படும்" என அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
10. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
11.மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டதை அடுத்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
12. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பணிமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.