இன்றைய முக்கிய செய்திகள்..! ஒரு வரியில்... ஒரு நிமிட வாசிப்பில்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Sep 04, 2019 10:30 AM
இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. செய்திகள் பின்வருமாறு:-
1. ப.சிதம்பரத்தின் நிலைபோன்று தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கும் நேரிடும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
2. ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தில் நிச்சயம் தமிழக அரசு இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜா தெரிவித்துள்ளார்.
3. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்.
4. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
5. பள்ளிகளில் ஆதார் கட்டாயப்படுத்தப்படுவதற்கு விழுப்புரம் எம்.பி.,ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
6. நியூயார்க் முதலீட்டாளர் கூட்டத்தில் ரூ.2,780 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் பழனிசாமி கையெழுத்திட்டார்.
7. வெளிமாநில தொழிலாளர்களும் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
8. நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளார்.
9. சுங்கச் சாவடி கட்டண உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
10. அமெரிக்க ஓபன் டென்னீஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி பல்கேரிய வீரர் கிரிகர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.