இன்றைய முக்கியச் செய்திகள்... சில வரிகளில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Aug 30, 2019 12:25 PM
இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. செய்திகள் பின்வருமாறு:-
1. செலவினங்களை குறைக்கும் வகையில் பொதுத்துறை வங்கிகள் 12 ஆக குறைக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2. நவம்பர் 7-ந் தேதி கமல்ஹாசன் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் என்று மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
3. அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? என்று மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.
4. விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது.
5. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என்றும், கூடுதல் அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
6. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை செப்டம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
7. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்தது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அபிஷேக் வர்மா தங்கம் தங்கப்பதக்கத்தை வென்றார்.
8. இந்தியாவின் சிறந்த குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம், தென்கொரிய கால்பந்து வீரரான சன் ஹியுங் மின் ஆகியோர் சிறந்த ஆசிய தடகள வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
9. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆண்டிகுவா டெஸ்டில் அடித்த சதம், எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ரகானே தெரிவித்துள்ளார்.
10. ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில், போராட்டக்காரர்களின் வழிகாட்டுதலாகவும், தலைமை தாங்கியவராகவும் இருந்த ஆர்வலர் ஜோஷ்வா வாங் இன்று கைது செய்யப்படுள்ளார்.