'விதிய இது கூடவா கம்பேர் பண்றது?'.. ‘கொந்தளித்த நெட்டிசன்கள்’.. சர்ச்சையைக் கிளப்பிய எம்.பி மனைவியின் பேஸ்புக் பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Oct 22, 2019 05:46 PM
எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிபி ஈடனின் மனைவி அன்னா லிண்டா எர்ணாகுளத்தில் சூழ்ந்துள்ள வெள்ளத்தை பற்றிய தனது கருத்தினை முகநூலில் பதிவாக போட்டிருந்தார்.
அதில் வெள்ளம் சூழ்ந்த ஒரு படத்தை ஒருபுறமும், ஒருவர் ஐஸ் கிரீம் சாப்பிடும் படத்தை இன்னொரு புறமும் இணைத்து பகிரப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்ட அன்னா லிண்டா, ‘இப்படித்தான் விதி என்பது கற்பழிப்பு போல, எதிர்த்து போரிட முடியாதபோது அனுபவித்துவிட வேண்டியதுதான்’ என்று சர்ச்சை பதிவினை போட்டிருந்தார்.
ஆனால் கற்பழிப்பு என்பது விதி அல்ல ஆணாதிக்கம் என்றும், வெள்ளம் சூழுவது இயற்கை அல்ல, சில சமயம் ஆட்சியாளர்கள் சரியில்லை என்றாலும் நிகழும் என்றும் கொந்தளித்து நெட்டிசன்கள் இதற்கு ரியாக்ஷன் செய்திருந்தனர்.
இதனையடுத்து அப்பதிவை நீக்கிய அன்னா லிண்டா, சோகமான ஒரு சம்பவத்தை எதார்த்தமான நகைச்சுவை உணர்வோடு கடந்து செல்லும் எண்ணத்திலேயே அப்பதிவினை போட்டதாகவும், ஆனால் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்து மற்றுமொரு போஸ்டினை பதிவிட்டுள்ளார்.