‘கல்லூரிக்கு போகும்போது’... ‘மாணவிக்கு நேர்ந்த கோரம்’... ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 02, 2019 05:35 PM

கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த மாணவியை, மயக்கமருந்து கலந்த கர்சீப்பால் கடத்தி சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pune college student says abducted by three men, raped

புனே நிகிடியை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை மேம்பாலத்தின் அருகே கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல், திடீரென அவரது முகத்தில் மயக்க மருந்து கலந்த கர்சீப்பை வைத்து அமுக்கினர். இதை சுவாசித்த மாணவி, அரை மயக்கநிலையில் கத்த முயற்சித்துள்ளார். ஆனால் அவரது வாயில் துணிக்கட்டப்பட்டிருந்தால் அவரால் குரல் எழுப்பமுடியவில்லை.

இதையடுத்து அந்த கும்பல், மாணவியை அங்கு தயார் நிலையில் நின்ற ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர். மறைவான இடத்திற்கு சென்றபின், மாணவியை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதன்பின்னர், மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவந்து, மாணவியை விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த மாணவி, அலங்கோலநிலையில் வீட்டிற்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவி சார்பில் நிகிடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #PUNE #RAPE #VICTIM