'காதலனோட பிறந்த நாள் கொண்டாட்டமா'?...'சூட்கேசில் பார்சல்'... முன்னாள் காதலன் வெறிச்செயல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jul 31, 2019 10:35 AM

இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற இளம்பெண்ணை அவரது காதலனே கொன்று, சூட்கேசில் அடைத்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Russian Instagram influencer found dead in a suitcase

இன்ஸ்டாகிராமில் 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டவர் எகெடெரினா கரக்லொனாவா. ரஷ்யாவைச் சேர்ந்த இவர், தான் பதிவிடும் புகைப்படங்கள் மூலம் பல இளைஞர்களின் மனதை கவர்ந்தவர். இதனால் தினமும் இவர் பதிவிடும் புகை படங்களுக்காக பலரும் காத்திருப்பது வழக்கம். இந்நிலையில் சில நாட்களாக எகெடெரினாவை காணாத நிலையில், பல இடங்களில் அவரது பெற்றோர் அவரை தேடியுள்ளார்கள். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், பதறி போன அவர்கள் தங்களது மகளை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள்.

இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட மாஸ்கோ நகர காவல்துறையினர், எகெடெரினா தங்கியிருந்த அறையில் இருந்த பெரிய சூட்கேசில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து தடயங்களை சேகரித்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அப்போது கொலை நடந்த அன்று இளைஞர் ஒருவர் சூட்கேசுடன் வெளியேறும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் எகெடெரினாவின் முன்னாள் காதலன் என்பது தெரியவந்தது. தனது புதிய காதலருடன் எகெடெரினா பிறந்த நாளை கொண்டாட இருந்ததால் ஆத்திரத்தில் அவரை கொன்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். கத்தியால் குத்தியும், கழுத்து அறுக்கப்பட்டும் எகெடெரினா கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #MURDER #INSTAGRAM #CCTV #RUSSIAN #YEKATERINA KARGLANOVA #MOSCOW #SUITCASE