‘10 ம் வகுப்பு மாணவியுடன் காதல்’.. விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிய கும்பல்..! பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 08, 2019 09:20 AM

திருமணமான இளைஞர் பள்ளி சிறுமியை ஏமாற்றி காதலித்ததாக கூறி சிறுமியின் சகோதரர்கள் அந்த நபரை ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man attacked for illegal relationship with school girl in Trichy

திருச்சி மாவட்டம் திம்மராய சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 30 வயதான இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. ஆனால் இவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டனின் மனைவி வேறொரு நபருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 10 -ம் வகுப்பு படிக்கும் சிறுமியை மணிகண்டன் காதலித்தாக கூறப்படுகிறது.

இதனால் சிறுமியின் சகோதர்கள் மணிகண்டனை கண்டித்துள்ளனர். ஆனால் அதன் பிறகும் சிறுமியை மணிகண்டன் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிறுமியுடன் மணிகண்டன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த சிறுமியின் சகோதர்கள் மணிகண்டனை தாக்கியுள்ளனர்.

இதனால் உயிருக்கு பயந்து அருகில் இருந்த அடகுக் கடைக்குள் மணிகண்டன் ஓடியுள்ளார். ஆனாலும் கடையில் இருந்து வெளியே இழுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் அடிப்படையில் தப்பியோடிய நபர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

Tags : #ATTACKED #CCTV #MAN #SCHOOL #GIRL #TRICHY