அடுக்குமாடி வீடுகளை குறிவைக்கும் மர்ம கும்பல்..! சென்னையில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 01, 2019 04:31 PM

இரவு நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து கொள்ளை சம்பவம் நடைபெறுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A suspicious gang tried to steal in Chennai flats

சென்னை கொரட்டூர் பகுதிகளில் மர்ம நபர்கள் உலவுவதாகவும், திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது மர்ம நபர்கள் மூவர் அடுக்குமாடி குடியிருப்பில் உலாவுவது தெரிந்துள்ளது.

இரவு நேரத்தில் யாரும் இல்லா சமயம் பார்த்து குடியிருப்பின் மாடிப்படிகளில் வழியே மர்ம நபரகள் ஏறி வருகின்றனர். அதில் சட்டையின்றி வரும் மர்ம நபர் பூட்டி இருக்கும் வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் குடியிருப்பில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #CHENNAI #FLATS #THEFT