'விட்ராதடா தம்பி, விட்ராத'... 'பால்கனியில் சிக்கிய சிறுவன்'... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jul 31, 2019 05:55 PM

6வது தளத்திலிருந்து கீழே விழுந்த சிறுவனை பொதுமக்கள் சேர்ந்து மீட்கும் காட்சிகள், பலரையும் நெகிழ செய்துள்ளது.

Locals use duvets to catch boy falling from balcony in China

சீனாவின் சோங்குய்ங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6வது தளத்தில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர், தனது பேரனை வீட்டில் விட்டு விட்டு காய்கறி வாங்க கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பால்கனியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன், திடீரென அதன் விளிம்புக்கு சென்று வெளிப்புறமாக சென்றுள்ளான். இதில் நிலைத்தடுமாறிய சிறுவன் பால்கனி விளிம்பை பிடித்தபடி அழுதுகொண்டிருந்தான். இதனை பார்த்து அதிர்ந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்க முயற்சி செய்தார்கள்.

இதையடுத்து பெரிய போர்வையை வலை போல் பிடித்து கொண்டு கீழே காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சிறுவன் கை நழுவி அதில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினான். உடனே முதலுதவி செய்த மருத்துவர்கள், குழந்தையின் உடலில் எந்த காயமும் இல்லை என உறுதி செய்தார்கள். சிறுவனை மீட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #CCTV #BLANKET #BOY #BALCONY #CHINA