‘டோல்கேட்’டில் நடந்த தகராறு.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 30, 2019 10:35 AM

சுங்கச் சாவடியில் ஏற்பட்ட தகராறில் ஊழியர்கள் மீது காரை மோதிவிட்டு தப்பிச் சென்ற கார் ஓட்டுநரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Car ran over several people at toll plaza in Rajasthan

ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கார் என்னும் இடத்தில் உள்ள சுங்கச் சாவடிக்கு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது சுங்க சாவடியில் உள்ள தடுப்பின் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் கார் ஓட்டுநருக்கும், சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த கார் ஓட்டுநர் காரை பின்னும், முன்னுமாக இயக்கி சுங்கசாவடி ஊழியர்கள் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து சுங்கச் சாவடி ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து சுங்கச் சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கார் ஓட்டுநரை போலிஸார் தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #RAJASTHAN #CAR #TOLL PLAZA #ACCIDENT