தனி அறை, 'பாலியல்' தொல்லை...'காப்பாற்றுங்கள்'..கதறிய பேராசிரியை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Sep 24, 2019 04:05 PM
சென்னையை அடுத்த தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக வேலை செய்துவரும் பெண் ஒருவர் நேற்று பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில்,கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த கல்லூரியில் தான் வேலை செய்து வருவதாகவும் தன்னுடன் வேலை செய்பவர்கள்,தன்னை தனி அறையில் அடைத்து வைத்து தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும், அவர் கூறியிருந்தார்.
மேலும் தனக்கு உணவு,தண்ணீர் எதுவும் தருவதில்லை என்றும் தன்னை தற்கொலை செய்துகொள்ள தூண்டுவதாகவும்,இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து தன்னைக் காப்பாற்றும் படியும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து,அந்த கல்லூரியின் டீன் குணசேகரன் இதுகுறித்து விசாரிக்க கமிட்டி ஒன்று அமைத்திருப்பதாகவும் அந்த பெண் சொன்ன நபர் குற்றங்கள் செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தநிலையில் அந்த கல்லூரியின் முதல்வர் வெங்கடகிருஷ்ணன்,அட்மின் லட்சுமிகாந்தன்,பொது மேலாளர் சசிக்குமார்,பைனான்சியர் செந்தில்குமார்,துப்புரவு பணியாளர் முனியம்மா உள்ளிட்ட 5 பேர் மீது கொலைமுயற்சி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
