அடக்கடவுளே! கனவுன்னு நெனச்சு.. நெஜமாவே 'நிச்சயதார்த்த' மோதிரத்தை முழுங்கிய பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Sep 16, 2019 07:36 PM

சில சமயங்களில் கனவு என நாம் நினைக்கும் சம்பவங்கள் நிஜமாக நடந்து விடுவதுண்டு.அதேபோல ஒரு சம்பவம் தற்போது அமெரிக்காவில் நடந்துள்ளது.

Woman swallows engagement ring in sleep, thinking it is a dream

கலிபோர்னியாவின் சாண்டியாகோ மாகாணத்தில் வசிக்கும் ஜென்னா ஈவண்ட்ஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது சோகத்தை விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,'' இரவில் தூங்கும்போது நிச்சயதார்த்த மோதிரத்தை  விழுங்கி விட்டேன்.ஆனால் கனவு என நினைத்து தூங்கிவிட்டேன்.மறுநாள் தான் அது உண்மை என்பது எனக்குத் தெரிந்தது. ஏனெனில் விரலில் மோதிரம் இல்லை.எனது குடும்பத்தாரிடம் இதுகுறித்து சொன்னேன்.அவர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று எனது நிலையை விளக்கினேன்.அவர்கள் எனது வயிற்றில் மோதிரம் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து மற்றொரு மருத்துவமனைக்கு எனது வருங்கால பாபியுடன் சென்றேன்.அங்கு எண்டாஸ்கோபி சிகிச்சை வழியாக எனது மோதிரம் அகற்றப்பட்டது.மோதிரத்தை அவர்கள் என்னிடம் கொடுக்காமல், பாபியிடம் கொடுத்தனர். எனக்கு மனமகிழ்ச்சியாக இருந்தது. நான் பாபியிடம் மோதிரத்தைக் கொடுக்குமாறு கேட்டேன், அவர் மாட்டேன் என மறுத்துவிட்டார். இறுதியாக, இன்று காலை என் மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்தார். அதை மீண்டும் விழுங்க மாட்டேன் என்று நான் உறுதியளித்தேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

60,000 ஆயிரம் ஷேர்கள், 36,000ஆயிரம் கமெண்டுகளுடன் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவைப் பார்த்தவர்கள் இதனை வைத்து நீங்கள் ஒரு சிறுகதை எழுதலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags : #FACEBOOK #ENGAGEMENT