உங்க 'பேஸ்புக்'க ஓபன் பண்ணாமலேயே 'ஸ்டோரி' வைக்கலாம்..எப்படி தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Sep 20, 2019 10:38 AM

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் தற்போது தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.எளிதாக தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்பதால் ஏராளமானோர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். அதிகரிக்கும் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு புதிய வசதிகளை அவ்வப்போது வாட்ஸ்அப் வெளியிட்டு வருகிறது.

Now you can share WhatsApp status as Facebook story

இந்தநிலையில் ஸ்டேட்டஸ் வைப்பதில் தற்போது  புதிய வசதியொன்றை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. இதுநாள்வரை நீங்கள் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் வைக்க வேண்டுமென்றால் பேஸ்புக் சென்று அதன்பின்னர் தான் ஸ்டேட்டஸ் வைக்க முடியும்.ஆனால் வாட்ஸ் அப்பின் இந்த புதிய வசதி வழியாக நீங்கள் வாட்ஸ்அப்பில் வைக்கும் ஸ்டேட்டஸை நேரடியாக, பேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம். வாட்ஸ் அப் போல இதிலும் 24 மணி நேரம் மட்டுமே உங்களின் ஸ்டேட்டஸ் இருக்கும்.

எப்படி வைக்கலாம்?

வாட்ஸ் அப்பில் நீங்கள் ஸ்டேட்டஸ் வைக்கும்போது ஹோம் பட்டன் சென்று கிளிக் செய்தால், அங்கு ஹாம்பர்கர் ஐகான் இருக்கும்.அதில் ஷேர் டூ ஆன் பேஸ்புக் என்ற ஆப்ஷன் இருக்கும்.அதனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் உங்கள் ஸ்டேட்டஸை ஷேர் செய்ய முடியும்.இது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக ஷேர் ஆகாமல் பேஸ்புக் ஸ்டேட்டஸ் ஆகவே பதிவாகும்.

இந்த ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டும் என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம். ஒருவேளை நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை டெலிட் செய்தால் பேஸ்புக்கில் அது டெலிட் ஆகாது.லிங்க் ஆக இல்லாமல் உங்கள் ஸ்டேட்டஸை ஸ்கிரீன்ஷாட் எடுத்தாற்போல பேஸ்புக்கில் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.