'வேர்ல்ட் கப்'ல இந்தியா வேணும்னே தோத்துச்சு... 'சந்தேகமே' இல்ல... 'இதுக்காக' தான் அப்படி பண்ணாங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வேண்டுமென்ற தான் தோல்வியடைந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் போட்டியில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றதன் மூலம், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் இந்த போட்டி குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 'நாங்கள் அந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் அனைவருக்கும் அந்த உணர்வு தான் தோன்றியது. ஒரு நல்ல பந்து வீச்சாளர் தன்னுடைய சிறந்த திறனை வெளிப்படுத்தாமல் ரன்களை அள்ளிக் கொடுக்கிறார். எங்களுக்கு சந்தேகமே இல்லை. நாங்கள் அரையிறுதிக்கு முன்னேற கூடாது என்பதற்காக தான் இந்திய அணி வேண்டுமென்றே தோற்றது. இதற்காக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை குறித்து எழுதிய புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். அதில் இங்கிலாந்து உடனான போட்டியில் ரோகித் மற்றும் கோலி ஆகியோரின் பாட்னர்ஷிப் மர்மமாக இருந்ததாகவும், தோனி இலக்கில்லாமல் ஆடியதாகவும் அவர் எழுதியது குறிப்பிடத்தக்கது.