VIDEO: 'படுவேகத்தில்' வந்த கார் மூலம்... ஏற்பட்ட 'திடீர்' விபத்து... கார் மீது தொங்கிய 'இளைஞர்'... 'பரபரப்பு' நிமிடங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் இவர் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருமழிசை மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டி பூந்தமல்லி நோக்கி காரில் வேகமாக வந்துள்ளார். அப்போது தனியார் நிறுவன ஊழியரான அம்பத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வானகரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கணேசமூர்த்தியின் கார், ரஞ்சித்குமார் பைக் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில், பைக்கில் இருந்த ரஞ்சித்குமார், கணேசமூர்த்தியின் காரின் மேல்பகுதியில் சென்று விழுந்தார். கார் மோதி பைக்கில் வந்தவர் பலியாகி இருக்கலாம் என்ற பயத்தில் கணேசமூர்த்தி காரை இன்னும் வேகமாக ஓட்டி தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து அங்கு பணியில் இருந்த டிராபிக் போலீசார், தன்னை பின்தொடர்வதை அறிந்து கொண்ட கணேசமூர்த்தி, இன்னும் வேகமாக காரை செலுத்த, காரின் மேலிருந்த ரஞ்சித்குமார் கெட்டியாக பிடித்து கொண்டுள்ளார். சுமார் ஒரு கிலோமீட்டர் துரத்தி சென்று கணேசமூர்த்தியை மடக்கிப் பிடித்தனர். அப்போது தான் காரின் மீது ரஞ்சித்குமார் இருந்தது கணேசமூர்த்திக்கு தெரிய வர, அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ரஞ்சித்குமாரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்திற்கு காரணமாக இருந்த காய்கறி வியாபாரி கணேசமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.