'ஐயா, பிப்ரவரி 14 லாக்டவுன் போடுங்கய்யா'... 'முதல்வரிடம் இளைஞர் வைத்த கோரிக்கை'... 'வைரலாகும் வீடியோ'... உண்மை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலர் தினம் வர இருக்கும் நிலையில், அன்றைய தினத்தில் லாக்டவுன் போடுங்கள் என இளைஞர் ஒருவர் முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதுகுறித்த உண்மை தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 காதலர் தினமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். காதலன் காதலிக்கும் காதலி காதலனுக்கும் பரிசு பொருள்களை ஆசை ஆசையாகக் கொடுப்பது என தங்கள் அன்பை வெளிப்படுத்தத் தயாராகி வருகிறார்கள். அதே நேரத்தில் சிங்கிள்ஸ் ஒரு பக்கம் காதலர் தினத்தை மீம்ஸ் மூலமாகப் பயங்கரமாகக் கலாய்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடத்தில், இளைஞர் ஒருவர் 'ஐயா... பிப்ரவரி 14 ஆம் தேதி லாக்டௌன் போடுங்கயா' என்று கேட்பது போலவும் அதற்கு முதல்வர் உங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று பதில் சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோ உண்மையானது அல்ல என்றும் முதல்வர் அப்படி சொல்லவே இல்லை என்பதும் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக, கல்லூரி மாணவர்களில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், தேர்வுக்கு பீஸ் கட்டியவர்கள் மட்டும்தான் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. பீஸ் கட்டாதவர்கள் பாஸ் செய்யப்படவில்லை.
அப்போது பிரச்சாரத்திலிருந்த முதல்வரிடம், பீஸ் கட்டாத அரியர் மாணவர்களையும் பாஸாக்குங்கள் என்று மாணவர் ஒருவர் கேட்க, அதற்குத்தான் உங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் பதிலளித்தார். ஆனால் யாரோ ஒரு நெட்டிசன் அந்த பகுதியை மற்றும் எடிட் செய்து காதலர் தினம் அன்று லாக்டவுன் போடுங்கள் என இளைஞர் கேட்ட வீடியோவில் சேர்ந்துள்ளார்.
அய்யா பிப்ரவரி 14 லாக்டவுன் போடுங்கய்யா.!
உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றபடும்...
🤪🤪🤪 pic.twitter.com/gUBZU9fC3L
— இம்சை அரசன் (@shah_one_men) February 11, 2021

மற்ற செய்திகள்
