'இந்த உருட்டல் மிரட்டலுக்குலாம் பயப்பட மாட்டேன்...' 'நான் எதையும் சந்திக்க தயார்...' - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ஜனநாயக நாட்டில் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாது.அண்ணன், தம்பி பிரச்சினை என்று அமைச்சர் வேலுமணி பேசியது தவறாக ஊடகத்தில் வெளிவந்துள்ளது.அதிமுகவில் கட்சி விரோதமாக செயல்பட்டால் மற்ற கட்சிகளைபோல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவர்.
நீதிமன்றம் உத்தரவுபடி சொத்துகள் அரசுடைமையாக்கப் பட்டுவருகிறது. அரசுக்கும், இதற்கும் சம்மந்தம் கிடையாது.தொகுதி பங்கீட்டில் இருபறி என்பதே கிடையாது. பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்படும்.நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சி காணப்படுகிறது.அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.
அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவுடன் இணைய நினைத்தால் தலைமை ஆலோசித்து முடிவு செய்யப்படும்.அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் 18 எம்எல்ஏக்களை பிரித்து சென்றவர் டிடிவி தினகரன். அவரது முயற்சி செயல்படவில்லை. அதனால் அமமுகவை தொடங்கினார்.
வருவாய்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.நிதிநிலைமை பொறுத்து தான் அவர்களுக்கானதை அரசு செய்யும்.மற்ற மாநிலங்களைபோல் கொரோனா காலத்திலும் தமிழகத்தில் சம்பள பிடித்தம் இல்லை.அதிமுகவில் எள்முணை அளவுகூட பிரச்சினை இல்லை.திமுகவினர் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவமனை கொண்டுவந்து அதிமுக சாதனை படைத்துள்ளது.மத்திய அரசின் உதவி பெற்று ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். திமுக என்ன திட்டங்களை கொண்டு வந்தது.எனக்கு அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உருட்டல், மிரட்டலுக்கு நான் அஞ்சமாட்டேன். நான் எதையும் எதிர்கொள்ள தயார்' என்று கூறினார்.

மற்ற செய்திகள்
