'யாராவது திட்டும்போது மூஞ்சிய எப்படி வச்சுக்கணும்'... 'எப்பா டேய்'... 'என் இனமடா நீ'.... இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 04, 2020 10:24 AM

குழந்தைகள் என்ன செய்தாலும் அது அழகு தான். அதிலும் அவர்கள் குறும்பு செய்யும் போது அவர்களைத் திட்டும் நேரத்தில் அவர்கள் கொடுக்கும் முகபாவனைகளைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அது போன்ற ஒரு வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

Cutest video of Mom talking with her kid is going viral

இணையத்தில் வைரலாகும் வீடியோவில் தாய்க்கும், அந்த குழந்தைக்கும் நடக்கும் அழகான உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அந்த குழந்தை படுத்துக் கொண்டு இருக்கிறது. அந்த குழந்தையின் தாய் அவனைத் தூங்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் நான் தூங்க மாட்டேன் என ஜாலியாக படுத்து கொண்டு இருக்கிறார். உடனே அவர், திட்டுனா  பேசாம வாங்கிக்கணும், குழந்தைனா தூங்கணும். தூங்குனா தான் சாப்பிட்டது எல்லாம் செரிக்கும் என அவர் கூறுகிறார்.

அப்போது அந்த குழந்தை கொடுக்கும் முகபாவனைகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். பின்னர் குழந்தையின் தாய், ''இப்படியே தூங்காம குறும்பு பண்ணிக்கொண்டே இருக்க போறியா எனக் கேள்வி கேட்கிறார். இப்படி குறும்பு பண்ணிக்கிட்டே இருந்தால் உன்னை நாட்டி பாய்ன்னு சொல்வாங்க, உன்ன எந்த ஸ்கூல்லையும் சேக்க மாட்டாங்க என கூறிய அடுத்த நொடி, அந்த குழந்தை கொடுத்த ரியாக்ஷன் தான் அல்டிமேட். நமட்டு சிரிப்பு என்று சொல்வார்களே அதைத் தான் அந்த குழந்தை கொடுத்தது.

இதையடுத்து ''நான் உன்னை திட்டுறேன்டா, திட்டும்போது முகத்தை சீரியசா வச்சுக்கணும் டா, இப்படிச் சிரிக்கக் கூடாது என அவர் சொன்னதும், குபீரென கிண்டல் செய்வது போல அந்த குழந்தை சிரித்தது''.  மனதில் எவ்வளவு கஷ்டம், வேதனை இருந்தாலும் குழந்தையின் முகத்தைப் பார்த்தால் எல்லாம் மறைந்து விடும் என்ற கூற்று எவ்வளவு உண்மை என்பது இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் புரியும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cutest video of Mom talking with her kid is going viral | Tamil Nadu News.