'பேஸ்புக்ல சூசைட் பண்ண போறதா வீடியோ போட்ட இளைஞர்...' 'அலெர்ட் ஆன பேஸ்புக்...' 'டக்_டக்ன்னு ஆக்சன்...' - பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதற்கொலை செய்ய முயன்ற இளைஞரை பேஸ்புக் நிறுவனம் காப்பாற்றிய சம்பவம் மேற்கு வங்காளத்தில் நடந்துள்ளது.

மேற்குவங்காள மாநிலம் பிம்பூரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் மன அழுத்தம் காரணமாக, தான் தற்கொலை செய்ய போவதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்த இளைஞர் கடந்த 3 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதற்குமுன் 4 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் அவர் வெளியிட்ட வீடியோவை கவனித்த பேஸ்புக் நிறுவனம் உடனடியாக இது தொடர்பாக சைபர் பிரிவு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.
பேஸ்புக் நிறுவனத்தின் அளித்த கோரிக்கையை ஏற்ற சைபர் காவல்துறையினர், பேஸ்புக் நிறுவனம் அளித்த தகவல்களின் படி இளைஞரின் இருப்பிடத்தை கண்டறிந்துள்ளனர்.
உடனடியாக இளைஞர் வசிக்கும் பிம்பூர்பகுதி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, இளைஞரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் தற்கொலைக்கு முயற்சி செய்த நபரை போலீசார் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது

மற்ற செய்திகள்
