‘இது கொரோனாவ விட கொடூரம்யா!’ .. ‘குடித்துவிட்டு நடுரோட்டில்.. போதைக்காரர்கள் செய்த அட்டூழியம்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 21, 2020 04:25 PM

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைடில் போதை ஆசாமிகள் இருவர், குடிபோதையில் ஒருவர் மீது ஒருவர் கல் எறிந்து விபரீதமான அலப்பறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Erode drunkers assault each other by stones in street

தமிழ்நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சந்தையில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்துக்கு முன்பாகவே மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த நெருஞ்சிப்பேட்டையில் காலையிலேயே குடித்துவிட்டு 2 பேர் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி எறிந்துகொண்டிருந்துள்ளனர்.

இதனால் சாலையில் சென்ற பேருந்து, கார்கள் உள்ளிட்டவை அப்படியே நிறுத்தப்பட்டன. ஆனாலும் கற்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்து அலப்பறை செய்துகொண்டிருந்த சிவப்பு சட்டை மற்றும் வெள்ளை சட்டை போதை ஆசாமிகள் இருவரும், ரத்த காயங்களுடன் அடுத்த ரவுண்டுக்கு தயாராகினர். எனினும் இரண்டாவது ரவுண்டில் இருவரும் வலி தாங்க முடியாமல் சமாதானத்துக்கு தயாராகினர்.

இவர்களின் இந்த அலப்பறை காட்சிகளை பார்த்த இணையவாசிகள், குடிபோதையானது கொரோனாவை விட கொடியது போல என்று கருத்துகளை கூறிவருகின்றனர்.

Tags : #ERODE