‘இத்தாலியில் கொரோனாவின் கோரம்’... ‘நிரம்பி வழியும் மருத்துவமனைகள்’... ‘உலகையே நடுங்க வைக்கும் இறப்பு எண்ணிக்கை’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்குதலால் 24 மணிநேரத்தில் 627 பேர் இத்தாலியில் பலியாகியுள்ள சம்பவம் உலகையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.

கொரோனா வைரசின் பிறப்பிடமாக அறியப்படும் சீனாவில், இதன் கோரப்பசிக்கு அங்கு மட்டும் 3,245 பேர் பலியாகியுள்ளனர். சீனாவுக்கு அடுத்தப்படியாக கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு அதிகமானோர் பலியாகிவரும் நாடாக இத்தாலி விளங்கி வந்தது. இந்தநிலையில், அங்கு வியாழக்கிழமை மட்டும் ஒரேநாளில் 427 பேர் கொரோனாவுக்கு இரையாகினர்.
இந்த துயரத்தின் சுவட்டை அந்நாட்டு மக்கள் மறப்பதற்குள், அடுத்த அதிர்ச்சியாக நேற்று மட்டும் ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் 627 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை, உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நாலாயிரத்தை தாண்டி முதலிடத்தில் உள்ளது. கொரோனாவின் கோரப்பசிக்கு கடந்த இரண்டு மாதங்களில், ஒரு நாட்டில் ஒரே நாளில் நிகழ்ந்துள்ள, அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.
அங்குள்ள மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. இத்தாலியில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இத்தாலியின் வயதானவர்களின் எண்ணிக்கை, பிற நாடுகளை ஒப்பிடும்போது அதிகம் என்பதால், அங்கு உயிரிழப்புகள் அதிகம் நிகழ்வதாக கூறப்படுகிறது.
இத்தாலியின் இந்த நிலையை அடுத்து, சீன சுகாதாரத் துறையினர் இத்தாலிக்கு உதவ முன்வந்து, இத்தாலியில் மக்கள் கட்டுப்பாடோடு இல்லை எனவும் தனிமைப்படுத்துதலை பின்பற்றுவதில்லை எனவும் கூறியுள்ளனர். அதோடு மருத்துவர்கள் முதல் மருத்துவ உபகரணங்களையும் அனுப்பி வைத்துள்ளது. அதனால், ராணுவத்தின் உதவியை கோரியுள்ளது இத்தாலி. 24 மணிநேரமும் இயங்கும் இடுகாடுகளில் இருந்து உடல்களை அப்புறப்படுத்தவும், பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்காணிக்கவும் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதேபோல், அமெரிக்காவில் இன்னும் 2 வாரங்களில் நடக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
