'எனக்கு ரொம்ப கஷ்டமான டைம்'... 'ஆனா கொரோனா குறித்து'... மருத்துவர் அஷ்வினின் உருக்கமான பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 28, 2020 11:31 AM

கொரோனா குறித்து பல்வேறு தகவல்களை உடனுக்குடன் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருபவர், மருத்துவர் அஸ்வின் விஜய். அவரின் பதிவுகள் கொரோனா குறித்து மக்களிடையே நிலவிய தேவையற்ற பதற்றத்தைப் போக்கியது. இந்நிலையில் மருத்துவரும் நடிகருமான, சேதுராமனின் மறைவு மருத்துவர் அஷ்வின் விஜய்யை நிலைகுலையச் செய்தது.

Dr Ashwin Vijay\'s emotional statement on Coronavirus update

தனக்கும் மருத்துவர் சேதுராமனுக்கும் இருக்கும் நட்பு குறித்தும், அவரின் மறைவு தனக்குத் தனிப்பட்ட வகையில் எந்த அளவிற்கு இழப்பு என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் மிகவும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா குறித்து மீண்டும் உங்களுக்கு உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வேன் எனத் தனது முகநூல் பக்கத்தில் மருத்துவர் அஷ்வின் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், '' நண்பர்களே இது எனக்கு மிகவும் கடினமான தருணம். ஆனால் உங்கள் அனைவருக்காக நான் உறுதியோடு மீண்டு வருவேன். கவலைப்படாதீர்கள். என்னால் முடிந்த அளவிற்கு கொரோனா குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தைரியமாக இருங்கள், நாம் அனைவரும் கொரோனாவிற்கு எதிரான போரில் வெல்வோம்'' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #CORONAVIRUS #DR ASHWIN VIJAY #UPDATE