'தமிழகத்தில்' கொரோனா தற்போது...'எந்த' கட்டத்தில் உள்ளது?... முதல்வர் பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 28, 2020 12:43 AM

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று எந்த கட்டத்தில் உள்ளது? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.

Coronavirus is in First stage in Tamil Nadu: Edappadi Palanisamy

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு வளாகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் ஆய்வு செய்ய சென்றார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாடு அறையை உடனே தொடர்பு கொள்ள வேண்டும்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதற்கட்ட நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் 76 ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இது ஒரு கொடிய நோய். பொதுமக்களை பாதுகாக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும்.  பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பதே மிக மிக முக்கியம்,'' என தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது 144 தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.