“உணவு டெலிவரி, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்’ முதலிய சேவைகள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இருக்கும்”!.. முதல்வர் அறிவிப்பின் முழு விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக, ஞாயிறு முதல் நேரக் கட்டுப்பாடு கொண்டுவரப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி காய்கறி கடைகள், உழவர் சந்தைகள், பெட்ரோல் பங்குகள் முதலானவை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் என்றும், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் நாள் முழுவதும் எப்போதும் போல் இயங்கும், என்றும் அறிவித்துள்ளார்.
தவிர, ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற ஆன்லைன் உணவக டெலிவரி சேவைகள் காலை 9 முதல் 7.30 மணி வரையிலும், மதிய 12 முதல் 2.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு மணி வரையிலும் என 3 நேரங்களில் இயங்கும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
Tags : #CORONA #CORONAVIRUS #EDAPPADIKPALANISWAMI #CORONALOCKDOWN #21DAYSLOCKDOWN #INDIAFIGHTCORONA
