கடைசில 'அவங்களும்' ஒரேயடியா 'சீனா' பக்கம் சாஞ்சுட்டாங்க... அதிரவைத்த 'அமெரிக்க' அதிபர்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Mar 27, 2020 11:04 PM

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இரு நாடுகளும் ஒன்றையொன்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. கொரோனா வைரஸ் விவகாரத்தை சீனா மறைத்து விட்டதாக குற்றஞ்சாட்டும் அதிபர் டிரம்ப் அதை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டு வருகிறார். இதனால் இரு நாடுகளும் அவ்வப்போது வார்த்தை போர்களில் ஈடுபட்டு வருகின்றன.

Trump Slams WHO For Allegedly Siding With China

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து இருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரும், அதன் வெளியுறவு குழு மூத்த உறுப்பினருமான மைக்கேல் மெக்காலே இருவரும் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பதிலுக்கு டிரம்ப், ''உலக சுகாதார நிறுவனம், சீனாவின் பக்கம் மிகவும் சாய்ந்து விட்டது. இதில் ஏராளமான மக்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் மிகவும் நியாயமற்று நடந்து கொள்கிறது என்ற பேச்சு பரவலாக எழுந்து இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், நியாயமுடன் நடந்து கொள்ளவில்லை என்று ஏராளமானோர் உணர்கிறார்கள்,'' என்றார்.

டிரம்பின் இந்த கருத்து உலகளவில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனரான கெப்ரேய்சஸ், புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உருவானபோது அதை முடிவுக்கு கொண்டு வருவதில் சீன தலைமை உறுதியுடன் செயல்பட்டது கருத்து தெரிவித்து இருந்தார். அவரின் இந்த பேச்சுதான் இதற்கெல்லாம் காரணம் என்று கூறப்படுகிறது. இதேபோல உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் மற்றும் கெப்ரேய்சஸ்ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் சீனா சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்ததும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.