‘பரஸ்பர குற்றச்சாட்டு சர்ச்சைக்கு இடையில்’... ‘சீன அதிபருடன், அமெரிக்க அதிபர் திடீர் ஆலோசனை’... வெளியான புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Mar 27, 2020 09:31 PM

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Trump and Xi speak after US and China trade barbs on coronavirus

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது சீனாவை மிஞ்சி அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகி வருகிறது. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், அமெரிக்க ட்ரம்ப் ஃபோன் மூலம் ஆலோசனை நடத்தினார்.  அதன்பிறகு ட்ரம்பின் ட்விட்டர் பதிவில், ‘ஜி ஜின்பிங் உடனான உரையாடல் நன்றாக இருந்தது. நம்முடைய பூமியின் பெரும் பகுதியை அழித்துவரும் கொரோனா வைரஸ் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்தோம்.

சீனா, கொரோனா வைரஸ் குறித்த வலுவான புரிதலைக் கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல், சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, “இந்த கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து வெளியே வர சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக அதிபர் ட்ரம்ப், கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் உலக சுகாதார நிறுவனமான WHO சீனாவிற்கு சாதகமாக செய்ல்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். இதற்கு சீன அரசு, கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது சீனாவில் தானே தவிர, வைரஸ் உருவானது சீனாவில்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என, சீன அரசு தெரிவித்தது. இந்நிலையில் சீன அரசின் ஆங்கில நாளிதழான 'குளோபல் டைம்ஸ்' இந்த வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவானது எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONAVIRUS #CHINA #PRESIDENT #AEMERICAN #DONALD #TRUMP