'10 மாதக்' குழந்தைக்கு 'கொரோனா' தொற்று... தனிமைப்படுத்தப்பட்டு 'சிகிச்சை'... 'பதற்றத்தில்' குடும்பத்தினர்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 27, 2020 09:41 PM

கர்நாடகாவில் 10 மாத கைக்குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 month old baby affected corona virus in karnataka

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. கர்நாடாகவில் மட்டும் இன்று புதிதாக ஏழு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் கர்நாடகாவில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில், தக்ஷன கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாதக் குழந்தையும் அடங்கும். அந்த குழந்தையின் குடும்பத்தினர் யாரும் இதுவரை வெளிநாடு சென்றது இல்லை. ஆனால் சமீபத்தில் அவர்கள் கேரளாவுக்கு சென்று வந்துள்ளனர்.

அந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதை தெரிந்து கொண்ட குடும்பத்தினர் கடந்த மார்ச் 23ம் தேதி மங்களூருவில் உள்ள தனியார் மருத்தவமனையில் அனுமதித்துள்ளனர். அந்தக் குழந்தைக்கு சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் கைக் குழந்தைகளுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால் அந்த குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குழந்தையின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 10 மாதக் குழந்தைக்கு கொரோனா பாதித்தது அம்மாநில மக்களிடைய கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CORONA #KARNATAKA #KERALA #10 MONTH BABY