‘1920ல் ஸ்பானிஷ் ஃப்ளூவாலயே ஒன்னும் பண்ண முடியல!’.. ‘2020ல் கொரோனாவாம்!’.. 2 நூற்றாண்டு கொடிய நோய்களுக்கு டிமிக்கு கொடுத்த 101 வயது கொரோனா நோயாளி குணமானார்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 28, 2020 02:22 AM

இத்தாலியில் கொரோனாவுக்கு 86ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் 600 முதல் 1000 பேர் வரை உயிரிழந்து வரும் சம்பவத்தை காண முடிகிறது.

101 yr old man in Italy recovered from COVID-19 survived the 1918 flu

இந்நிலையில் இத்தாலியைச் சேர்ந்த 101 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளார். இத்தனை வயதுக்காரர் ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதுதான் ஆச்சரியம் என்றால், இன்னொரு ஆச்சரியமும் இவரது வாழ்வில் உள்ளது. ஆம், 1919-ஆம் ஆண்டு பிறந்த இந்த மனிதர் பிறந்த சமயத்தில் ஸ்பெயின் ஃப்ளூ உலகையே ஆட்டிப்படைத்துக் கொத்துகொத்தாக, கோடி கோடியாக மக்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது.

அந்த நூற்றாண்டின் மிகப்பெரும் கொடிய நோயாக கருதப்பட்ட அந்த நோயில் இருந்து தப்பித்ததோடு, தற்போது 2020-ஆம் ஆண்டு மிகப்பெரும் ஆட்கொல்லி நோயாக உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸ் நோயால் தாக்கப்பட்டும் உயிர் பிழைத்துள்ளார் இந்த 101 வயது முதியவர்.

Tags : #CORONAVIRUS