'கதவ தெறங்கப்பா, வெளியவரனும்'... 'நாய் செய்த வைரல் காரியம்!'... 'க்யூட் வீடியோ உள்ளே'...
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Manishankar | Jan 14, 2020 05:05 PM
காரில் அடைத்துவைக்கப்பட்ட நாய், கதவைத் திறப்பதற்காக ஹாரன் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாஃப் என்பவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், இரண்டு நாய்கள் உள்ளன. அதில், ஒரு நாய், தான் வெளியே வர வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஹாரன் அடிக்கிறது.
பெரிய அளவில் யாரும் கண்டு கொள்ளாததால், தொடர்ச்சியாக ஹாரன் அடிக்கிறது. பின்னர், ஒருவர் வந்து காரின் கதவைத் திறந்துவிட, நாய் வெளியே வருவது போல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாயின் செயல் சுட்டித்தனமாகவும், ரசிக்கும் படியும் இருப்பதாக பலரும் பதிவிட்டுவருகின்றனர்.
Tags : #DOG #HORN
