அடுத்த போட்டியில் அந்த பொறுப்பு யாருக்கு?’.. விலகிய முக்கிய வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்றுமுன்தினம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து ரிஷப் பந்தின் ஹெல்மெட்டை தாக்கியது. அதில் அவருக்கு தலையில் லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் அப்போட்டியில் அவர் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்நிலையில் காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
