'தீப்பிடித்த வீட்டுக்குள் நாய்க்குட்டியின் குரல்!'.. மனம் கேட்காமல் காப்பாற்றப் போன 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Dec 04, 2019 01:34 PM

அமெரிக்காவில் நாய்க்குட்டியை காப்பாற்றச் சென்று 23 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

toddler dies after tried to save puppy from his burning house

செல்லப் பிராணிகள் குழந்தைகளிடத்தின் அன்பு கொண்டிருப்பது போலவே, குழந்தைகளும் அளவில்லாத அன்பினை செல்லப் பிராணிகளுடன் கொண்டிருப்பதற்கான சாட்சியமாய் ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் அர்கனாஸ் பகுதியில் ஒரு வீட்டில் தீப்பிடித்திருந்துள்ளது.

உடனே சுதாரித்த பெற்றோர்கள், தங்கள் 23 மாத மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துக் கொண்டிருந்தனர். இந்த வேளையில்தான், தீப்பிடித்த வீட்டுக்குள் சிக்கிக் கொண்டு கத்திய, குட்டி நாய்க்குட்டியினை குட்டிச் சிறுவன் காப்பாற்ற நினைத்து வீட்டுக்குள்ளே சென்றுவிட்டான்.

இதை கவனிக்காத குழந்தையின் பெற்றோர், பின்னர் சுதாரித்துள்ளனர். குழந்தையின் தந்தை வீட்டுக்குள் புகுந்து குழந்தையை காப்பாற்ற முயற்சிப்பதற்குள் சிறுவனும் தன் செல்லப் பிராணியுடன் சேர்ந்து பரிதாபமாக கருகிய சோகம் நெஞ்சைப் பிழியும் சம்பவமாக அரங்கேறியுள்ளது.

Tags : #TODDLER #DOG #HOME