'வண்டிய நிறுத்துங்க!.. குழந்தைங்க ஏதோ லெட்டர் கொண்டு வர்றாங்க'!.. உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில்... குழந்தைகளின் குறும்பு வேலை!.. வைரல் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உதயநிதி ஸ்டாலினிடம், சிறுவர்கள் சிலர் கொடுத்த கோரிக்கை மனு ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்?

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிரச்சாரத்துக்கு வந்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் தங்களுக்கு கிரிக்கெட் பேட் வேண்டும் என கேட்ட சிறுவர்களால் கலகலப்பு ஏற்பட்டது.
தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிக்காக ஆண்டிப்பட்டி வந்திருந்த உதயநிதி ஸ்டாலின், பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு காரில் கிளம்பினார். கன்னியப்பபிள்ளைப்பட்டி என்ற கிராமத்தின் அருகே அவரை சந்தித்த சிறுவர்கள் சிலர், கையில் துண்டுச் சீட்டு ஒன்றை கொடுத்தனர்.
அதில் தங்களுக்கு கிரிக்கெட் விளையாட பேட் தேவை என்றும், அதனை தாங்கள் வாங்கித் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அதனைப் பெற்றுக்கொண்டு பேட் வாங்கித் தருவதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின் சிறுவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

மற்ற செய்திகள்
