வீட்டுக்குள் நுழைந்து காரை திருடிய மர்ம நபர்கள்.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து காரை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Thieves break into Ricky Ponting\'s Melbourne home and steal car Thieves break into Ricky Ponting\'s Melbourne home and steal car](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/thieves-break-into-ricky-pontings-melbourne-home-and-steal-car.jpg)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இரண்டு முறை ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி மெல்போர்னில் உள்ள ரிக்கி பாண்டிங்கின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவரது காரை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும், போலீசார் காரை தேடும் முயற்சியில் இறங்கினர். அப்போது மெல்போர்ன் கேம்பர்வெல் என்ற பகுதியில் அந்த காரை தாறுமாறாக ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள், போலீசார் விரட்டி வருவததை அறிந்து சாலையிலேயே விட்டுச் சென்றுவிட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் நுழைந்து காரை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)