'அது மட்டும் நடக்கலன்னா...' 'இந்த மேடையிலையே தற்கொலை பண்ணிப்பேன்...' - ஆவேசமாக பேசிய திமுக முன்னாள் மத்திய அமைச்சர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் திமுக வெற்றி பெறவிட்டால் தீக்குளிக்க போவதாக திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் கூறிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Former MP Jagathratsakan DMK not win commit suicide on Former MP Jagathratsakan DMK not win commit suicide on](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/former-mp-jagathratsakan-dmk-not-win-commit-suicide-on.jpg)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் திமுக பொறுப்பாளரான விளங்கிவருகிறார் ஜெகத்ரட்சகன். இந்நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் பணிக்காக வரும் ஜனவரி 21 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் திமுக பொறுப்பாளரான ஜெகத்ரட்சகன் கூறுகையில், 'புதுச்சேரியில் தற்போது திமுக கூட்டணியான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வரும் தேர்தலில் திமுக ஆட்சியில் அமர முடிவெடுத்திருக்கிறது. புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன். அப்படி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்' எனக் கூறியுள்ளார்.
மேலும், புதுச்சேரி தேர்தலில் திமுக கூட்டணியை ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஜெகத்ரட்சகன் பாஜாகவில் இணைய விரும்புவதாக புரளிகள் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)