வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு? - வெளியான பரபரப்பு தகவல்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்பது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஹைதராபாத்தில் உயர் ரத்த அழுத்தத்துக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், மருத்துவர்களின் ஆலோசனையை அடுத்து, தன்னால் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்றும், ரசிகர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் கூறி தனது அரசியல் முடிவை அறிவித்தார்.
இதனால் ரஜினிகாந்தின் அரசியல் ரீதியான அபிமானிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தாலும், ரஜினியின் உடல்நலம் தான் முக்கியம். அவர் எடுத்த முடிவில் தங்களுக்கு திருப்தி தான் என்றும் சிலர் கூறிவந்தனர். இதனிடையே சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகள் பலவும் களமிறங்கியுள்ளன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுதாகர் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்
