’போடு ரகிட ரகிட!’.. '21 வயதில் மேயர்!'.. ‘கேரள அரசியல் கிரவுண்டில்’ இறங்கி அடிக்கும் ‘இளம் பெண்கள்’!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sivasankar K | Dec 25, 2020 04:56 PM

கேரளாவில் பெண்கள் தொடர்ந்து அரசியலில் ஆர்வம் காட்டி வருவதை காண முடிகிறது. அதுவும் குறிப்பாக கேரளாவில் இளம் பெண்கள் துணிச்சலுடன் அரசியலுக்கு வந்து தங்களது சமூக அக்கறையை காண்பித்து வருவதை அனைத்து மாநிலங்களுமே உற்றுநோக்கி வருகின்றன.

21 yr old young girl becomes Trivandrum Mayor Kerala Inspiring

அவ்வகையில் கேரளாவின் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக 21 வயது நிரம்பிய பெண் பதவியேற்க உள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

ALSO READ: “சொல்றவங்க.. சித்ரா இறந்த அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல?.. ஆனா அன்னைக்கு இரண்டு குடும்பத்துக்கும் நடந்தது இதுதான்!” - ஹேமந்த் தரப்பு வக்கீல் ‘பரபரப்பு’ பேட்டி? வீடியோ!

21 yr old young girl becomes Trivandrum Mayor Kerala Inspiring

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட முடவன்முகல் வார்டு கவுன்சிலராக ஆர்யா ராஜேந்திரன் என்பவர் பதவியேற்க உள்ளார். இவரைத்தான் புதிய மேயராக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது. ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியை சேர்ந்த பிஎஸ்சி கணிதவியல் மாணவியான ஆர்யா எஸ்.எஃப்.ஐ மாநிலக்குழு உறுப்பினராக இருக்கிறார்.

21 yr old young girl becomes Trivandrum Mayor Kerala Inspiring

மேலும் சிபிஎம் கேசவதேவ் சாலை கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலா ஜன சங்கத்தின் மாநில தலைவராகவும் இருந்து வரும் ஆர்யா தற்போது கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி கைப்பற்றியதை அடுத்து அந்தக் கட்சியால் புதிய மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ: 'ரஜினிக்கு என்ன ஆச்சு?'.. கொரோனா ‘நெகடிவ்’ என ரிசல்ட் வந்ததும் நிம்மதி அடைந்த ரசிகர்களுக்கு மீண்டும் உருவான பதற்றம்! ‘அப்போலோ’ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!

21 yr old young girl becomes Trivandrum Mayor Kerala Inspiring

இந்நிலையில் 21 வயது நிரம்பிய இளம் மேயர் என்கிற பெருமையை தற்போது ஆர்யா ராஜேந்திரன் பெற்று பதவி ஏற்க இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 21 yr old young girl becomes Trivandrum Mayor Kerala Inspiring | India News.