'கட கடவென ஸ்டாலினை நோக்கி வந்த மூதாட்டி'... 'பரபரப்பான வார்டு சபை கூட்டம்'... ஸ்டாலினிடம் அவர் சொன்ன விஷயம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற திமுக மக்கள் வார்டு சபைக் கூட்டத்தில் ஸ்டாலினை நோக்கி திடீரென மூதாட்டி ஒருவர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தி வரும் திமுக, நகரப் பகுதிகளில் வார்டு சபைக் கூட்டத்தையும் நடத்தி வருகிறது. சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற வார்டு சபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராயபுரத்திற்கும் திமுகவுக்கும் உள்ள பழைய கால வரலாற்றை நினைவு கூர்ந்து பேசினார். பின்னர் அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த மூதாட்டி ஒருவர் ஸ்டாலினை நோக்கி நடந்து சென்றார். இதைப் பார்த்துப் பதறிய திமுக நிர்வாகிகள் மூதாட்டியைத் தடுக்க முயன்றனர். ஆனாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் ஸ்டாலினிடம் சென்ற மூதாட்டி, சில வினாடிகள் அவரிடம் பேசிவிட்டுத் திரும்பினார். இதனால் அந்த கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனிடையே ஸ்டாலினோடு அந்த மூதாட்டி என்ன பேசினார் என்பது குறித்து அவர் விவரித்தார்.
அதில், ''முதியோர் உதவித் தொகைக்கு எழுதிக் கொடுத்தும் கிடைக்காதது குறித்து ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாகவும், திமுகவினர் மூலம் விரைவில் கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஸ்டாலின் உறுதி அளித்ததாகவும்'' தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
