‘கையில் துப்பாக்கியுடன் நின்ற நபர்’!.. முதல்வர் பரப்புரை சென்ற பகுதியில் நடந்த அதிர்ச்சி.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வரை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் ஒருவர் துப்பாக்கியுடன் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Man arrested with gun at CM Palanisamy campaign Man arrested with gun at CM Palanisamy campaign](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/man-arrested-with-gun-at-cm-palanisamy-campaign.jpg)
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் 5-ம் கட்டமாக இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதனை அடுத்து வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் முதல்வரை வரவேற்க மக்கள் காத்திருந்தனர். அப்போது கூட்டத்துக்குள் நின்ற நபர் ஒருவர், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் நின்றதைப் பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வரை வரவேற்க நின்ற கூட்டத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)