'அரக்கபரக்க ஓடி வந்த நபர்...' 'கையில வச்சிருந்த கருப்பு பை...' 'எடுக்க எடுக்க வந்துகிட்டே இருக்கு...' - தெரிய வந்த 'ப்ளாக் மேஜிக்' பின்னணி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்த ஒருவர் மந்திரவாதம் மூலம் பலரை ஏமாற்றியுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
![Maharashtra arrested for allegedly deceiving several people Maharashtra arrested for allegedly deceiving several people](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/maharashtra-arrested-for-allegedly-deceiving-several-people.jpg)
சிக்காலி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒருவர் அரக்கபரக்க ஓடிவருவதைக் கண்டுள்ளார்கள். அவரை பார்த்தபோதே சந்தேகம் எழுந்ததால், அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினர், அப்போது அந்த நபரிடம் ஒரு கருப்பு பை காணப்பட்டது. மேலும் அவர் சிக்காலி பகுதியில் வசிக்கும் கௌதம் மோர் என்பதும் தெரிய வந்தது.
அந்த கருப்பு பையை சோதித்து பார்த்ததில், எலுமிச்சை, ஒரு கருப்பு துணி, ஒரு துடைப்பம், வளையல்கள், ஒரு கத்தி, ஒரு கருப்பு சுத்தியல் உள்ளிட்ட சூனியத்திற்கு தேவையான பொருட்கள் ஏகப்பட்டவை இருந்துள்ளது. விசாரணையில், கௌதம் சில சடங்குகளைச் செய்ய ஒரு நபரின் வீட்டிற்குச் செல்வது போலீசாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் திலீப் போஸ்லே கூறுகையில் "அந்த இரவில் ஒருவரது வீட்டிற்கு சூனியம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அவர் இந்த மாதிரியான ப்ளாக் மேஜிக் சூனியம் செய்வதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கிறார், மக்கள் அவரை நம்பி ஏமாறுகிறார்கள், இந்த மாதிரி ஆசாமிகளிடம் ஜாக்கிரதையாக பொதுமக்கள் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)