'22 வயது இளைஞருக்கு வந்த ஆசை'... 'வெற்றிகரமாக நடந்த ஆபரேஷன்'... அவரையே அவர் கண்ணாடியில் பார்த்து அசந்துபோன ஆச்சரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Feb 09, 2021 05:20 PM

22 வயது இளைஞர் தனது ஆசை நிறைவேறி தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Sri Lankan Man Goes Through Sex Change Surgery and Becomes A Woman

இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருக்கு தனக்குள் பெண்மை இருப்பதை உணர்ந்துள்ளார். இதையடுத்து தீவிர யோசனைக்குப் பின்னர் தான் பெண்ணாக மாறிவிடலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு அறுவை சிகிச்சை உட்படப் பல படிகள் இருக்கும் நிலையில், அறுவை சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் என்ற மருத்துவரை அணுகி தனது ஆசை குறித்து அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இதையடுத்து பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் இளைஞரின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த மருத்துவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து அறுவை சிகிச்சையும் தொடங்கியது. 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை இறுதியாக வெற்றியில் முடிந்தது. அதன்பயனாக 22 வயது இளைஞர் தான் ஆசைப்பட்டது போல இளம்பெண்ணாக மாறினார்.

இளைஞனாக இருந்து இளம்பெண்ணாக மாறிய அவர், தான் மிகவும் அழகாக இருப்பதாகக் கூறினார். தற்போது தான் முழு பெண்மையை உணர்வதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சமீபத்தில் அவருக்குத் திருமணம் முடிந்த நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Sri Lankan Man Goes Through Sex Change Surgery and Becomes A Woman

இதற்கிடையே 2 வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணாக மாறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆடை அலங்கார துறையில் நிபுணராக இருக்கும் 'யாரா' தற்போது மாடலாகவும் கலக்கி வருகிறார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sri Lankan Man Goes Through Sex Change Surgery and Becomes A Woman | World News.