VIDEO: ‘HONDA ஆக்டிவா.. மாதம் ஒரு முறை MUTTON பிரியாணி.. பட்டு வேட்டி சேலை’ - இது ‘வேறமாரி’ தேர்தல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேர்தலையே மிஞ்சும் வகையில் வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம், பட்டு வேட்டி சேலை, தையல் எந்திரங்கள் என கவர்ச்சிகரமான இலவசங்களை வழங்குவதாக நெல்லை டயோசிசன் தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாதம் ஒருமுறை மட்டன் பிரியாணி உள்ளிட்ட அதிரடி ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி மண்டலத்திற்கான பெருமன்ற உறுப்பினர்களை அப்பகுதி ஊர்களிலிருந்து தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 7ஆம் தேதி நிகழ்கிறது.
இந்த திருமண்டலத்தில் 115 ஊர்களில் இருந்து டயோசிசனுக்கு 140 உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய இந்த தேர்தலில் வெற்றி பெறக் கூடிய உறுப்பினர்கள் திருநெல்வேலி மண்டலத்தில் கல்வி நிலவர குழு செயலாளர், பொருளாளர் ,லே செகரட்டரி ஆகிய பொறுப்புகளுக்காக தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அத்துடன் இந்த சபையின் கட்டுப்பாட்டில் 500 தேவாலயங்கள், 120 டிடிடிஏ பள்ளிகள், 10 கல்லூரிகள், ஒரு பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆகியவை உள்ளன. இந்த தேர்தலில் தான் வேதநாயகம் அணி , டிஎஸ் ஜெயசிங் அணி என இரு அணிகள் போட்டி போடுகின்றன. இவை தவிர சிவந்திப்பட்டி சபைக்கு, கொங்கந்தான்பாறை ஊரிலிருக்கும் உறுப்பினர் பதவிக்கு இரண்டு பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தான் வாக்குகளை கவர்வதற்காக அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அதன்படி தாங்கள் வெற்றி பெற்றால் அங்குள்ள குடும்பங்களுக்கு ஒரு ஹோண்டா ஆக்டிவா வாகனம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
அத்துடன் மாதத்தின் ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டன் பிரியாணி வழங்கப்படும் என்றும் 18 முதல் 120 வயது வரை உள்ள பெண்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை தினங்களில் இரண்டு பட்டு புடவை இலவசமாக அளிக்கப்படும் என்றும் கூறி பெண் வாக்காளர்களை ஈர்த்துள்ளனர்.
ஆண்கள் மட்டும் சும்மாவா? அவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பட்டுவேட்டி சட்டை வழங்கப்படும் என்றும் சுய தொழில் தொடங்க கூடிய பெண்களுக்கு உதவும் விதமாக தையல் மிஷின் இலவசமாக வழங்கப்படும் என்றும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த வாக்குறுதிகளை அச்சிட்டு ஒவ்வொரு வீடாக கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.