'ரகசியமாக' பறந்த தகவல்... 'சம்பவ' இடத்திற்கே சென்ற போலீசார்... சாமி 'சத்தியமா' இனி பண்ண மாட்டோம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு நேரத்தில் வாலிபர்கள் செய்த வேலையால், போலீசார் அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி உள்ளனர்.

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் இளைஞர்கள் பலரும் ஊரடங்கு உத்தரவினை மீறி கூட்டாக சேர்ந்து வெளியில் சுற்றுவது, வாலிபால் விளையாடுவது, சமைத்து சாப்பிடுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார் அவர்களுக்கு நூதனமான முறைகளில் தண்டனை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த கண்டாச்சி புரத்தில் வாலிபர்கள் 15 பேர் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபர்கள் 15 பேரையும் அந்த ஊரில் உள்ள அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு இனிமேல் விளையாட வெளியில் வர மாட்டோம். ஊரடங்கு உத்தரவை மீற மாட்டோம் என இளைஞர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று அம்மன் கோவில் முன்பு அங்கப்பிரதட்சணம் செய்து சாமி சத்தியம் செய்தனர். தமிழகம் முழுவதும் இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும், போலீசார் அவர்களுக்கு நூதன தண்டனை வழங்குவதும் தற்போது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது.
