'சாப்பாட்டுல என்ன இருந்துச்சு தெரியுமா'?... 'சென்னையின் பிரபல 'ஹோட்டல்' மீது புகார்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Aug 03, 2019 10:57 AM
சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல ஹோட்டலான சரவணபவனில், வழக்கறிஞர் சாமி என்பவர் கடந்த 2014ம் ஆண்டு உணவு உட்கொண்டுள்ளார். அவர் சாப்பிட்ட உணவில் முடி இருந்ததாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உணவாக மேலாளரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு வேறு உணவு மாற்றி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சுகாதாரமற்ற அந்த உணவால் தனக்கு வாந்தி மயக்கம் உண்டானதாகவும் கடுமையான வயிற்றுவலியும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் நுகர்வோர் நீதிமன்றத்தில் சாமி வழக்கு தொடர்ந்தார். அவருடைய மனுவில், சுகாதாரமற்ற உணவை வழங்கிய சரவணபவன் உணவகம் இழப்பீடாக ரூ.60 லட்சமும், மன உளைச்சல் ஏற்படுத்தியற்காக ரூ.30 லட்சமும் வழங்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். அதோடு தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சாமிக்கு ரூ.1.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென சரவணபவன் உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளது
