'20 வருஷத்துக்கு முன்னாடியும்'.. இப்படி நடந்துருக்கு'.. 20 லட்சம் இழப்பீடு தரச்சொன்ன கோர்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 23, 2019 10:37 AM

20 வருடத்துக்கு முன்னர் எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதற்காக தற்போது 21 வயது இளைஞரின் குடும்பத்துக்கு தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

compensation to HIV Transfused Blood victim 20 years later

கடந்த வருடம் எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை சாத்தூர் மருத்துவமனையில், விருதுநகரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தியதால் தமிழ்நாடே நடுங்கிப் போனது. அதுமட்டுமல்லாமல், இந்த விஷயத்தில் ரத்த தானம் செய்த நபர், தன் ரத்தம் செலுத்தப்பட்டதால் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காரணமாக குற்றவுணர்ச்சியில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இன்று இத்தனை மருத்துவ வளர்ச்சியும், வசதியும் இருக்கும் காலக்கட்டத்திலேயே இவ்வாறான தவறுகள் கவனக்குறைவால் நடக்கின்றன என்றால், 20 வருடத்துக்கு முன்னர், 1999-ஆம் வருடம், சென்னை எக்மோர் குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்கும் இதே தவறை மருத்துவர்கள் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதனை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், 20 வருடங்களுக்கு முன்னர், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஆண் குழந்தை, தற்போது 20 வயது இளைஞராக நிற்கிறார். அவரின் இந்த நிலையை எண்ணி வாடும் அவரது குடும்பத்தினருக்கும், 20 வருடங்களாக இப்படி நோய்வாய்ப்பட்டு இருக்கும் இளைஞரின் உடல் நிலையால், பொருளாதார தன்னிறைவு அடைய சிரமப்பட்டதால் அவருக்கும், மருத்துவர்கள் செய்த தவறுக்கு அபராதமாகவும் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலுயுறுத்தியுள்ளது.

ஆனால் அரசு தரப்பில் இருந்து பேசிய வழக்குரைஞர்,  குழந்தையின் பெற்றோர் எக்மோர் மருத்துவமனைக்கு வரும் முன்னரே, எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் மாற்றப்பட்ட தவறு, தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்ததாகவும், அதற்கும் இழப்பீடாக 50 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் வசதி இல்லாத அந்த பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்பது நிரூபணம் செய்யப்பட்டது. இதே போல் அந்த 50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை என்பது மருத்துவ செலவுக்கே சரி ஆகிவிடும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Tags : #HOSPITAL #HIVTRANSFUSEDBLOOD