இந்தியாவுக்கு டஃப் கொடுக்க மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்டார் ப்ளேயர்கள்..! வெளியான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 23, 2019 10:15 AM
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் ரிஷப் பந்த் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தீபக் சஹார் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டியில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடர்களில் கலக்கிய ரசல், பொல்லார்ட், சுனில் நரேன் போன்ற வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரசல் காயம் அடைந்துள்ளதால் சிகிச்சைக்குப் பின்னர் அணியில் சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விபரம்:
பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்பல், எவின் லெவிஸ், ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், பொல்லார்ட், ரோவ்மன் பாவெல், கீமா பால், சுனில் நரேன், காட்ரல், ஓஷானே தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஆண்ட்ரே ரசல், காரி பியர்ஸ்.
