'பிரபல SAXOPHONE இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்'... ‘இசைக் கலைஞர்கள் இரங்கல்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 11, 2019 08:33 AM

புகழ்பெற்ற சாக்சஃபோன் இசைக்கலைஞர், கத்ரி கோபால்நாத் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (69).

saxophone exponent Kadri Gopalnath passes away in mangaluru

கடந்த 1949-ம் ஆண்டு, கர்நாடக மாநிலம் மங்களூரில், நாதஸ்வர கலைஞரான தனியப்பா-கங்கம்மா தம்பதிக்கு கத்ரி கோபால்நாத் மகனாகப் பிறந்தார். இசைக்குடும்பத்தில் பிறந்ததால், இசையால் ஈர்க்கப்பட்டு, மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சபோன் வாசிப்பதைக் கற்றார் கோபால்நாத். பிறகு சென்னையில் பிரபல மிருதங்க இசைக் கலைஞர் டி. வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.

கடந்த 2004-ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இவர், தமிழ்நாடு கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'டூயட்' படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய கத்ரி கோபால்நாத்தின் சாக்சஃபோன் இசை, அனைத்து பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில்,  உடல்நலக்குறைவால் கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் கத்ரி கோபால்நாத்தின் உயிர் பிரிந்தது. இது இசைக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags : #SAXOPHONIST #KADRI GOPALNATH